கார் மோதி மக்கள் நலப்பணியாளர் பலி


கார் மோதி மக்கள் நலப்பணியாளர் பலி
x

கார் மோதி மக்கள் நலப்பணியாளர் பலியானார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டி ஊராட்சி நாடார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரியா (வயது 27). இவர் கல்பாரப்பட்டி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற பிரியா மாலை 3 மணி அளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் சீரகாபாடி அருகே ஏரிக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story