அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து


அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
x

பாம்பன் ரோடு பாலத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் ரோடு பாலத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

டயர் வெடித்தது

தர்மபுரி பகுதியில் இருந்து வேன் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்த வேனை முனீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ராமநாதபுரம் வழியாக உச்சிப்புளி, மண்டபம் சாலையை கடந்து பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இந்த வேனின் டயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோடு பாலத்தின் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் லேசான சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு வந்துவிட்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 12 பக்தர்கள் வேனில் மதுரைக்கு சென்றனர். இந்த வேனை பாஸ்கர் என்பவர் ஓட்டி உள்ளார். வேன் பாம்பன் ரோடு பாலத்தை கடந்து மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே உள்ள சாலையில் சென்றபோது ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசு பஸ்சும் வேனும் எதிர்பாராத விதமாக மோதி விபத்தில் சிக்கியது.

மழை

இதில் வேனின் ஒரு பகுதி முழுமையாக அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் லேசான சிறு காயங் களுடன் உயிர் தப்பினர்.

பாம்பன் பகுதியில் நேற்று காலை நல்ல மழை பெய்ததால் மண்டபம் கடற்கரை பூங்கா சாலை முதல் ரோடு பாலம் முழுவதும் அதிக ஈரப்பதமாக இருந்ததால் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.


Next Story