விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன் தினம் இரவு எஸ்.கொட்டாவூர் பகுதியில் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு வாகனமும், ஆட்டோவும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன. இதில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire