கார் மோதி விவசாயி பலி


கார் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி விவசாயி பலியானார்.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையை அடுத்த முத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைரவன் (வயது 70). விவசாயி. சம்பவத்தன்று இவர் ஒக்கூர் அண்ணா நகரில் வசிக்கும் தன்னுடைய தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வைரவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story