கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x

கார் மோதி வாலிபர் பலியானார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் காட்டூரணி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் வடிவேல் (வயது40). இவர் மாடக்கொட்டான் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல் ஒன்றில் சாப்பாடு வாங்கிவிட்டு ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக மதுரையில் இருந்து உச்சிப்புளி நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்கு உள்ளானது. தலையில் படுகாயமடைந்த வடிவேல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாய் வசந்தா (65) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் உச்சிப்புளி என்மனங்கொண்டான் அபுதாகிர் மகன் முகம்மது அசன் (35) என்பவரை கைது செய்தனர்.


Next Story