கார்- மொபட் மோதல்;தனியார் கல்லூரி பஸ் டிரைவர் பலி
கார்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் கல்லூரி பஸ் டிரைவர் பலியானார்.
சேலம்
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது52). இவர் தனியார் கல்லூரி பஸ் டிரைவர். இவர் தனது மொபட்டில் மைக்ரோஸ்டேசன் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து எதிரே வந்த கார் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவல் இந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட ராமகிருஷ்ணனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராமகிருஷ்ணன் இறந்து போனார். விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story