ஈரோட்டில் குழிக்குள் சிக்கிய லாரி


ஈரோட்டில் குழிக்குள் சிக்கிய லாரி
x

ஈரோட்டில் குழிக்குள் சிக்கிய லாரி

ஈரோடு

ஈரோடு சூளை முதலிதோட்டம் எல்.வி.ஆர்.காலனிக்கு செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும் நேற்று இரவில் மழை பெய்ததால் மழைநீர் தேங்கி குழி இருப்பது தெரிவதில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மரம் ஏற்றி வந்த லாரி அந்த குழிக்குள் சிக்கியது. இதனால் மேற்கொண்டு லாரியை டிரைவரால் இயக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு லாரி குழியில் இருந்து வெளியில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story