காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அருகே உள்ள திருவதிபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் வேலைக்காக காவேரிப்பட்டணம் வந்திருந்தார். சம்பவத்தன்று மாலை மகேந்திரன் தேர்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ஜலகண்டேஸ்வரர் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story