அந்தியூர் பஸ்நிலையம் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதியது- 5 பேர் உயிர் தப்பினர்

அந்தியூர் பஸ்நிலையம் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதியது- 5 பேர் உயிர் தப்பினர்
x

அந்தியூர் பஸ்நிலையம் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதியது- 5 பேர் உயிர் தப்பினர்

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பஸ்நிலையம் அருகே பவானி ரோட்டில் விபத்துகளை தடுப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து பர்கூர் வழியாக மைசூரு செல்வதற்காக வந்த ஒரு கார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

காரை ஓட்டி வந்த குமார் என்பவர் உள்பட காருக்குள் இருந்த 5 பேரும் காயமின்றி உயிர் தப்பினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் விபத்துள்ளான காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

ஒளிரும் ஸ்டிக்கர்கள் தடுப்பு சுவரில் அமைக்கப்படவில்லை. அதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்பு சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story