சிவகிரி அருகே மரம் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்

சிவகிரி அருகே மரம் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்
x

சிவகிரி அருகே மரம் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்

ஈரோடு

சிவகிரி

கர்நாடகாவில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் மூலனூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி என்ற இடத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் சென்ற போது எதிர்பாராதவிதமாக லாரி ரோட்டோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது. இதில் பனை மரம் முறிந்து அந்த வழியாக மேலே சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்ததால் 4 மின்கம்பங்கள் கீழே சாய்ந்தது. மேலும் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்இணைப்பை சரிசெய்தனர். இந்த விபத்தில் டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.

Next Story