புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளிக்கூட பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் காயம்


புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளிக்கூட பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் காயம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளிக்கூட பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் காயம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று நேற்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளை அழைத்து செல்வதற்காக சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி-கோவை மெயின்ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் குறுக்கே மாடு பாய்ந்ததால் அந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

இதனால் பள்ளிக்கூட பஸ் லாரியின் பின்னால் மோதியது. இதில் பள்ளிக்கூட பஸ்சின் முன்புறம் சேதம் அடைந்தது. அதேசமயம் பள்ளிக்கூட பஸ்சின் பின்னால் கல்லூரி மாணவர் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story