அரசு பஸ் மோதி 5 பேர் படுகாயம்
அரசு பஸ் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தில் இருந்து சரக்கு வாகனத்தில் விவசாய பணிக்காக 20 நபர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முனியாண்டி சாயல்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் சரக்கு வாகனத்தில் மோதியது. இதில் அந்த வாகனத்தில் இருந்த கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த பூமா, ஞானசுந்தரி, முனியம்மாள், லட்சுமி, அபிதா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சரக்கு வாகன டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (வயது37) கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் வெள்ளத்துரையை கைது செய்தனர்.