பஸ், லாரி மோதல்; 10 பேர் படுகாயம்
பஸ், லாரி மோதி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டையில் இருந்து நேற்று மாலை அதவத்தூர் என்ற ஊருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அதை டிரைவர் கோட்டைச்சாமி ஓட்டி சென்றார். மணிவண்ணன் கண்டக்டராக இருந்தார். தேவகோட்டை-ஓரியூர் ரோட்டில் வெளிமுத்தி அருகே சென்ற போது எதிரே வந்த மணல் லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் லாரி டிரைவர் நேமத்தான்பட்டி கார்த்திக் ராஜா படுகாயம் அடைந்தார். அவருடைய கால்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். அதேபோல் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் இருந்த 7 பயணிகள் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story