ஆட்டோ மோதி பெண் பலி


ஆட்டோ மோதி பெண் பலி
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ மோதி பெண் பலியானார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சுசிந்திரன் மனைவி சத்யா (வயது 31). ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது தாய் ராணியுடன்(58) முல்லைநகர் பஸ்நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் தாயும், மகளும் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராணியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடிவருகின்றனர்.


Next Story