சரக்கு வாகனம் மோதி பா.ஜ.க. நகர துணைத்தலைவர் பலி


சரக்கு வாகனம் மோதி பா.ஜ.க. நகர துணைத்தலைவர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனம் மோதி பா.ஜ.க. நகர துணைத்தலைவர் பலியானர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜோதி சண்முகம் (வயது 38). இவர் பாரதீய ஜனதா கட்சியின் காரைக்குடி நகர துணை தலைவராக இருந்தார். சம்பவத்தன்று இவா் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். வைரவன்பட்டி அருகே வரும்போது காரைக்குடியிலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதியது. இதில் ஜோதி சண்முகம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story