பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரிக்கு நேருக்கு நேர் மோதல்-2 டிரைவர்கள் படுகாயம்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரிக்கு நேருக்கு நேர் மோதல்-2 டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:36+05:30)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

சேலம் லீ பஜாரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 53). லாரி டிரைவர். இவர் சேலத்தில் இருந்து மரவள்ளி கிழங்கை லாரியில் ஏற்றி கொண்டு அரூருக்கு சென்று கொண்டிருந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் பகுதியில் எதிரே வந்த ஈரோட்டை சேர்ந்த கண்ணன் (44) என்பவர் ஓட்டி வந்த லாரியும், இளங்கோ சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சிக்கி லாரி டிரைவர்கள் இளங்கோ மற்றும் கண்ணன் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சேலம்-அரூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story