லாரி மோதி தொழிலாளி சாவு
லாரி மோதி தொழிலாளி இறந்தார்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே மலமானூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 59). இவர், மேச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், மேச்சேரி- ஓமலூர் சாலையில் சந்தைப்பேட்டை அருகில் சாலையோரம் மொபட்டில் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் மயில்சாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்த லாரி, சாலையோரம் நின்ற மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதின. விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire