ஊத்தங்கரையில்கட்டுப்பாட்டை இழந்து பேக்கரிக்குள் புகுந்த லாரிடிரைவர் காயம்
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள நீதிமன்ற வளாக கட்டிடத்தில் கலை என்பவரின் பேக்கரி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து லோடு ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஊத்தங்கரையில் கழிவுநீர் கால்வாயின் மீது மோதிவிட்டு அருகில் இருந்த பேக்கரி கடைக்குள் புகுந்து நின்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலை காயம் அடைந்த டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story