சரக்கு வாகனம் மோதி டிரைவர் சாவு


சரக்கு வாகனம் மோதி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனம் மோதி டிரைவர் உயிரிழந்தார்.

விருதுநகர்

சாத்தூர்.

சாத்தூர் அருகே முள்ளிச்செவல், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சிங்கராஜ் (வயது 22). டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சிங்கராஜ் மற்றும் இவரது நண்பர் முகேஷ்கண்ணன் இருவரும் உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சிங்கராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முகேஷ்கண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த குருசாமி (21) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story