சத்தி அருகே மின்கம்பம் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்


சத்தி அருகே மின்கம்பம் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்
x

சத்தி அருகே மின்கம்பம் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்

ஈரோடு

சத்தியமங்கலம்

கோவையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 55). அவருடைய மனைவி ஸ்ரீ வள்ளி (50). இவர்களுடைய மகள் ஸ்ரீ திதி (25). இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் சித்த வைத்தியர் ஒருவரை பார்த்துவிட்டு மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். காரை ராஜசேகர் ஓட்டினார். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது மோதி அங்குள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது காரில் பாதுகாப்புக்காக உள்ள ஏர் பலூன் உடைந்து வெளியேறியது. இதனால் காரில் இருந்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்தில் மின்கம்பம் உடைந்து அதன் மீது ஒயர் விழுந்து கிடந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்இணைப்பை துண்டித்தார்கள்.

பின்னர் மின் ஒயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அத்தாணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது பற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிரேன் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story