லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் இளையராஜா (வயது 38). இவர், ஆத்தூர் புதுப்பேட்டையில் சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் வந்து விட்டு ஒதியத்தூர் சென்று கொண்டிருந்தார். ஆத்தூர் அருகே மஞ்சினி வால்கரடு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி இளையராஜா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story