சத்தியமங்கலம் அருகே டிராக்டரில் கொண்டு சென்ற கரும்பு பாரம் சரிந்தது
சத்தியமங்கலம் அருகே டிராக்டரில் கொண்டு சென்ற கரும்பு பாரம் சரிந்து விழுந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே டிராக்டரில் கொண்டு சென்ற கரும்பு பாரம் சரிந்து விழுந்தது.
கரும்பு பாரம்
பவானிசாகர் அருகே உள்ள நெகமம் பிரிவில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் சென்றது. கொமாரபாளையம்பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது ஆட்டோ ஒன்று டிராக்டரை முந்திச்செல்ல முயன்றது. இதனால் டிராக்டர் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
சரிந்தது
அப்போது டிராக்டர் டிரையலரில் கட்டப்பட்டு இருந்த கரும்பு அப்படியே நடுரோட்டில் சரிந்தது. சரிந்த கரும்பு பட்டு சாலையோரம் நின்றிருந்த வாலிபர் ஒருவரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தினார்கள்.
கரும்பு சரிந்தபோது டிராக்டரை பின்தொடர்ந்து யாராவது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.