செடிகளுக்கு தண்ணீர் தெளித்த டிராக்டரில் மோதி விபத்து; காரில் வந்த பெண் சாவு


செடிகளுக்கு தண்ணீர்  தெளித்த டிராக்டரில் மோதி விபத்து; காரில் வந்த பெண் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செடிகளுக்கு தண்ணீர் தெளித்த டிராக்டரில் மோதிய விபத்தில் காரில் வந்த பெண் இறந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). இவர் கோவை மாவட்டம் சூலூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி சாந்தி (48), மகள் ஆர்த்தியுடன் பரமக்குடி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்தார். காரை டிரைவர் தீபக்குமார் (27) ஓட்டினார். திருப்பாச்சேத்தி அருகே உள்ள வெள்ளிகுறிச்சி விலக்கு அருகே வந்தபோது சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் முருகேசன், சாந்தி, டிரைவர் தீபக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சாந்தி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story