கார்-மோட்டார் சைக்கிள் மோதல்;மகள் கண்முன் தந்தை பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்;மகள் கண்முன் தந்தை பலி
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மகள் கண்முன் தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை

தேவகோட்டை,

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மகள் கண்முன் தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது 45). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சருகணி அருகே உள்ள கோபாலபுரம் வளைவில் வந்தபோது, தேவகோட்டையில் இருந்து காளையார்கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

மகள் கண்முன் தந்தை பலி

இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண்முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருவேகம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மகள் கண்முன் தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story