மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வெள்ளிப்பட்டறை தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வெள்ளிப்பட்டறை தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி பலியானார்.

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிவாஷ் (வயது 32), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு எருமாபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த அன்னதானப்பட்டியை சேர்ந்த பாலாஜி (40) என்பவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் நிவாஷ், பாலாஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த நிவாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாலாஜி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story