பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
x

பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

ஈரோடு

பவானிசாகர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் தக்காளி பாரத்தை இறக்கிவிட்டு மினி லாரி ஒன்று அங்கிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலையில் பவானிசாகர் நால்ரோடு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்ற போது திடீரென மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story