கார் மோதி முதியவர் பலி
கார் மோதி முதியவர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கே.கே.நகரில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ராமநாதபுரம் நயினார்கோவில் சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதி அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராமநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire