மோட்டார் சைக்கிள், பஸ் மீது ஆட்டோ மோதல்; தாய்-மகள்கள் உள்பட 5 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள், பஸ் மீது ஆட்டோ மோதல்; தாய்-மகள்கள் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 April 2023 2:30 AM IST (Updated: 26 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மோட்டார் சைக்கிள், பஸ் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தாய்-மகள்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவை சேர்ந்த உமையராஜன் மனைவி விஜி (வயது 34). இவர் தனது மகள்கள் உபசனா (8), பிரணவி (7) ஆகியோருக்கு புத்தாடை எடுப்பதற்காக நேற்று முன்தினம் ஒரு ஆட்டோவில் தேனிக்கு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை சுப்பிரமணியசிவா தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி (40) என்பவர் ஓட்டினார். தேனி-கம்பம் சாலையில் அவர்கள் வந்தபோது, பின்னால் ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு வழி விடுவதற்காக ஆட்டோவை சாலையின் வலது ஓரம் செல்லப்பாண்டி ஓட்டிச் சென்றார். அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியது. அதே வேகத்தில் எதிரே வந்த அரசு பஸ் மீதும் ஆட்டோ மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மகாலிங்கம், ஆட்டோவில் சென்ற விஜி, உபசனா, பிரணவி, ஆட்டோ டிரைவர் செல்லப்பாண்டி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து விஜி, அவருடைய 2 மகள்கள் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து விஜி கொடுத்த புகாரின் பேரில் செல்லப்பாண்டி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story