ெரயில் மோதி வடமாநில வாலிபர் பலி


ெரயில் மோதி வடமாநில வாலிபர் பலி
x

ெரயில் மோதி வடமாநில வாலிபர் பலியானார்.

மதுரை

திருமங்கலம்,

அசாம் மாநிலம் சீராங்க் பகுதியை சேர்ந்தவர் ரபிகுள்இஸ்லாம். இவருடைய மகன் யூசுப்அலி (வயது 19). இவர் திருமங்கலம் அருகே உள்ள சிட்கோ தொழில்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சிட்கோ கப்பலூர் ெரயில்வே கேட் அருகே உள்ள கடையில் பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் ெரயில் தண்டவாளம் வழியாக நடந்து வீட்டிற்கு சென்றார். அப்போது நெல்லையில் இருந்து வந்த செக்கிங் ெரயில் யூசுப்அலி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த மதுரை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story