கோத்தகிரியில் விபத்து: பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்தது -கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்
கோத்தகிரியில் பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்.
தலைகீழாக கவிழ்ந்தது
கோவை மாவட்டம் சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 58). இவர் தனது மனைவி மற்றும் உறவினர் பெண், அவரின் மகளுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். காரை அவரே ஓட்டியுள்ளார். அங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்து விட்டு தனது சொந்த ஊரான கோவைக்கு செல்வதற்காக கோத்தகிரி வழியாக காரில் சென்றுள்ளார். லேசான சாரல் மழையில், கார் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் கடைவீதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாறை மீது மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது.
உயிர்தப்பினர்
பாறை மீது கார் மோதிய வேகத்தில் காரில் இருந்த பாதுகாப்பு ஏர் பேக்குகள் உடனடியாக விரிந்ததால் காரில் இருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்துப் பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் காரில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சாலையில் கிடந்த காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். மேலும் கோத்தகிரி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.