கனரக வாகனங்களால் விபத்து
மன்னார்குடியில், மதுக்கூர் நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடியில், மதுக்கூர் நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள்
மன்னார்குடியில் மதுக்கூர் நெடுஞ்சாலையில் 6-ம் நம்பர் வாய்க்கால் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மதுக்கூர் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் 6-ம் நம்பர் வாய்க்கால் சாலைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்களின் டிரைவர்களுக்கு நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கனரக லாரிகள் மற்றும் வாகனங்கள் மறைப்பதால் இந்த சந்திப்பில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
அதேபோல் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களில் வருவோர் மதுக்கூர் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அடிக்கடி ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை மறைக்கும் வகையில் சாலை ஓரங்களில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்துவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும். மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.