விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி


விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் மாணவிகளுக்கு பாதுகாப்பு முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும், தீக்காயங்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், பட்டாசுகளை வெடிக்கும் போது பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும், நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்த வேண்டும், காலணிகளை அணிந்திருக்க வேண்டும், குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், மருத்துவமனை, கியாஸ் குடோன், பெட்ரோல் பங்க், சாலை போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்படன. இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story