மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: சாலை பள்ளத்தில் விழுந்து நெல் அறுவடை எந்திர டிரைவர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: சாலை பள்ளத்தில் விழுந்து நெல் அறுவடை எந்திர டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பள்ளத்தில் தவறி விழுந்து நெல் அறுவடை எந்திர டிரைவர் உயிரிழந்தார்.

விழுப்புரம்

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் முருகையன். அவரது மகன் அய்யனார் (வயது 20). இவர் புதுவை மாநிலம் கிராமப்புற பகுதிகளில் தங்கி நெல் அறுவடை எந்திரத்தை இயக்கி வந்தார். வாரம் ஒரு முறை செஞ்சியில் உள்ள வீட்டிற்கு சென்று பெற்றோரை பார்த்துவிட்டு பணிக்கு திரும்பி விடுவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு புறப்பட்டார். புதுவை -திண்டிவனம் 4 வழிச்சாலை அருவாப்பாக்கம் அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் அய்யனார் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story