லாரி-ஆட்டோ மோதல்;4 பேர் படுகாயம்
உடுமலை அருகே டேங்கர் லாரி மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேருக்கு நேர் மோதல்
பொள்ளாச்சி ஜோதி நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பூமாலை இவரது மகன் அண்ணாதுரை (வயது 52). இவருடைய மனைவி சரஸ்வதி (50) இவர்களது மகள் நந்தினி (26) இவர்கள் 3 பேரும் குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் உள்ள அண்ணாதுரையின் மகன் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக சென்றனர்.
விழாமுடிந்து பொள்ளாச்சி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த குருசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.
4பேர் படுகாயம்
பெதப்பம்பட்டி லிங்கம்மநாயக்கன்புதூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
ஆட்டோவில் பயணம் செய்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.