ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மெகா முகாம் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்


ஒவ்வொரு மாதமும்  பொதுமக்கள் குறைதீர்க்கும் மெகா முகாம் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:00 AM IST (Updated: 9 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கமிஷனர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மெகா பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். மேலும் 225 மனுக்கள் தீர்வு காணப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

மதுரை


மதுரை கமிஷனர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மெகா பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். மேலும் 225 மனுக்கள் தீர்வு காணப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

மெகா குறைதீர்க்கும் முகாம்

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்து வருகிறது. ஆனால் தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்வு காண அனைத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மெகா முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் மெகா பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

இதில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர், அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். முகாமில் மொத்தம் 328 மனுக்கள் பெறப்பட்டன. அதில் பலதரப்பட்ட புகார் மனுக்களில் 225 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. 103 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உதவி கமிஷனர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

225 மனுக்களுக்கு தீர்வு

மெகா முகாம் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறும் போது, போலீஸ் நிலையங்களில் தீர்க்கபடாத வழக்குகள் அதிக அளவில் உள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்குகளை தீர்க்க மெகா குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் புகார்தாரர்கள், எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து தீர்வு காணுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் அனைத்து விதமான புகார்களும் வந்துள்ளன. அதில் 225 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் கோர்ட்டில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று சிலர் வந்தனர். அவர்களுக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காணுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து அனுப்பி வைத்துள்ளோம். மேலும் தீர்வு காணப்பட்டவர்களிடம் அதுகுறித்து கருத்துகளை கேட்க உள்ளோம். அரசு உத்தரவின்படி வாரந்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

ஆனாலும் இது போன்ற மெகா முகாம் மாதம் ஒரு முறை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் போலீஸ் நிலையங்களில் வழங்கும் புகார் மனுக்கள் அனைத்தையும் பெற்று அதற்கான மனு ரசீதுகளை வழங்கி வருகிறோம் என்றார்.


Related Tags :
Next Story