மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பின்படி ஊராட்சிக்கான பொது நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பின்படி ஊராட்சிக்கான பொது நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பின்படி ஊராட்சிக்கான பொது நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மாவோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சிக்கான பொது நிதியை, மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பின்படி உயர்த்தி வழங்க வேண்டும். கிராம ஊராட்சியின் வளர்ச்சி நலன் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் சம்பந்தப்பட்ட துறை குறிப்பாக வருவாய்த்துறை (நிலஅளவை), காவல்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறையிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு உடனே நிறைவேற்றித்தர வேண்டும். பூஜ்யம் வங்கி கணக்கு கொண்ட ஊராட்சிகளுக்கு மாதாந்திர வரவு- செலவு நிதி ஒதுக்க வேண்டும். கிராம ஊராட்சி நிர்வாகத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட ஆவண செய்ய வேண்டும். பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு யூனிட் லாஸ்ட் குறைவாக உள்ளது. அதனை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தித்தர வேண்டும். ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி ரூ.25 ஆயிரமாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Next Story