வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மின்வாரிய அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈரோடு,

ஈரோடு மின்சார வாரியத்தில் தலைமை என்ஜினீயராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை கே.ஜி.நடேசன் (வயது 67) பணியாற்றினார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், நடேசன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருந்ததும், அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரியையான அவரது மனைவி மல்லிகாவின் (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடேசன், அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.1 கோடி அபராதம்

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக நடேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தலைமை என்ஜினீயராக பணியாற்றிய நடேசன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story