செஸ் போட்டியில் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை


செஸ் போட்டியில் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 28 July 2022 5:07 PM IST (Updated: 28 July 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் மற்றும் ஓவியப்போட்டி திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் எஸ்.வி.தருண் குமார், எஸ்.வி.தரன் குமார் ஆகியோர் செஸ் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர். இதே போல் 10-ம் வகுப்பு மாணவன் ஆர்.மைலேஷ்குமார் ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் எம். செந்தில் குமார், நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம், பள்ளி முதல்வர் பரிதா, ஆசிரியைகள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story