மண்டல விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


மண்டல விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் மண்டல விளையாட்டு போட்டியில் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

திருச்செந்தூர் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான பாரதியார் நாள், குடியரசு தின விளையாட்டு போட்டிகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்தது. இதில் கொம்மடிக்கோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் 2-வது இடமும், கேரம் விளையாட்டில் சிறப்பிடமும் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ், உடற்கல்வி ஆசிரியர் சித்திரைகுமார் ஆகியோர் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினர்.


Next Story