லயன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
வட்டார விளையாட்டு போட்டியில் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை சாதனை படைத்தனர்
திசையன்விளை:
திசையன்விளையில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திசையன்விளை லயன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றனர். 17 வயது பிரிவு ஈட்டி எறிதலில் பிரகாஷ் முதலிடமும், நீளம் தாண்டுதலில் அனிஷா செர்லின், பிரகாஷ் முதலிடமும், 14 வயது பிரிவு குண்டு எறிதலில் சின்ட்ரலா, 17 வயது பிரிவு கேரம் போட்டியில் ஜெரிஷ் ரூபன் முதலிடமும் பிடித்தனர்.
14 வயது பிரிவு பூப்பந்து ஒற்றையர் போட்டியில் ஸ்ரோபின் முதலிடமும், இரட்டையர் பிரிவில் சந்தன அலெக்ஸ் ராஜன், ஸ்ரோன்பின் முதலிடமும், 17 வயது ஒற்றையர் பிரிவில் பிரகாஷ் முதலிடமும், 14 வயது இரட்டையர் பிரிவில் சைனி ரூபல்லா, பஸ்லினா தஸ்லின் முதலிடமும், 19 வயது பிரிவு ஒற்றையர் பிரிவில் ஜெபா முதலிடமும், இரட்டையர் பிரிவில் ஆரோக்கிய அக்சயா, தேவதர்சினி முதலிடமும் பிடித்தனர்.டேபிள் டென்னிஸ் 17 வயது ஒற்றையர் பிரிவில் ரோமைல் முதலிடமும், இரட்டையர் பிரிவில் டெரிக்ஸ், ரோமைல் முதலிடமும், டெனிகாய்ட் 14 வயது ஒற்றையர் பிரிவில் ரோகைல் ரையான் கிளான்சி முதலிடமும், இரட்டையர் பிரிவில் கிளான்சி, மம்மதி ரித்திகா முதலிடமும், 17 வயது ஒற்றையர் பிரிவில் நித்திஸ்குமார் முதலிடமும், இரட்டையர் பிரிவில் லிசோன் அஸீஸ், நிதிஷ்குமார் முதலிடமும், அஸ்ரா தனுஷியா முதலிடமும், பீச் கைப்பந்து போட்டியில் டெரிக்ஸ், ரோமைல் முதலிடமும் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் டி.சுயம்புராஜன் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினார். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜை பள்ளி கமிட்டி துணைத்தலைவர் கமலா சுயம்புராஜன், இயக்குனர் சு.ரூகண்யா, பள்ளி முதல்வர் ஜாஸ்மின் ஆகியோர் பாராட்டினர்.