மதுரை மாணவ-மாணவிகள் சாதனை


மதுரை மாணவ-மாணவிகள் சாதனை
x

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை

மதுரை,

மாநில அளவிலான நீச்சல் போட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது அந்த போட்டியில் சென்னை, திருச்சி, கடலூர், கோவை, மதுரை மற்றும் 34 மாவட்டத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். அந்த போட்டியில் மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அணியினர் 22 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இந்த போட்டியில் அன்னபூரணி 4 தங்கம், ஹேமகார்த்திகேயன் 4 தங்கம், 6 வயது சிறுமி மோசிகா 4 வெள்ளி பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றனர். சாதனை படைத்த இவர்களை மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் மாரியப்பன், நீச்சல் பயிற்சியாளர் சதீஷ் பாண்டியன் மற்றும் நாகராஜ், வெங்கட் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


Related Tags :
Next Story