திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை


திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை
x

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திறனாய்வு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நடந்த தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அஸ்வினி, பூமா, ஜெய கௌரி, ராமலட்சுமி, சுஷ்மா, மாணவர்கள் மகாவிஷ்ணு, மணிகண்டன், சிமியோன், சூர்யா ஆகிய 9 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி செயலாளர் கே.கண்ணன், பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் வாழ்த்தி பேசினார். பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் பொன் ராமலிங்கம், ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, ஆசிரியர்கள் சகாயகலாவதி, ராதாகிருஷ்ணன், நித்யா ஸ்ரீ, ஜெப அகிலா, உண்ணாமலைத்தாய், சங்கரேஸ்வரி, சாந்தினி, அருள் காந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story