பிளஸ்-2 பொதுத்தோ்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை
பிளஸ்-2 பொதுத்தோ்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 297 பேர் எழுதினர். இதில் மாணவி யோனா செல்சி 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் ஸ்ரீராம் 586 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும் பெற்று சாதனை படைத்தனர். வேதியியல் பாடத்தில் 5 பேர், கணக்கு பதிவியியல் 2 பேர், இயற்பியல் 1, கணினி அறிவியல் 3 பேர் என மொத்தம் 11 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 550-க்கு மேல் 24 பேரும், 500-க்கு மேல் 83 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story