சட்டவிரோதமாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைப்பு


சட்டவிரோதமாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட 18 ஆழ்துளை கிணறுகளுக்கு அதிகாரிகல் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட 18 ஆழ்துளை கிணறுகளுக்கு நேற்று சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நிலத்தடி நீர் பாதிப்பு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில், சேர்வைக்காரன் மடம், கட்டாலங்குளம் மற்றும் குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்குடன் சட்டத்துக்கு புறம்பாக, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரை உறிஞ்சி வணிக நோக்கில் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதனால் சுற்றுப்பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடி சீல்வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கிணறுகளுக்கு சீல் வைப்பு

தற்போது சாயர்புரம் அருகேயுள்ள கட்டாலங்குளம் ஊராட்சியிலும் சிலர் தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்வதாக கலெக்டருக்கு புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், ராமராஜ், மண்டல துணை தாசில்தார் ரம்யா தேவி, வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர், அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த 18 ஆழ்துளை கிணறுகளை மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story