உரிமம் இன்றி செடிகள் விற்றால் நர்சரிகள் மீது நடவடிக்கை


உரிமம் இன்றி செடிகள் விற்றால்  நர்சரிகள் மீது நடவடிக்கை
x
சேலம்

சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நர்சரிகள் அமைத்து பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் கொள்முதல் செய்தும், உற்பத்தி செய்தும் விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பதற்கு விதை சட்டத்தின் படி உரிமம் பெற்று விற்பனை செய்வது கட்டாயமாகும். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் விதை சட்டத்தின் படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய உரிமம் வேண்டி விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பழ மற்றும் காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள் இருப்பு பதிவேட்டில் பயிர் மற்றும் ரகம் வாரியாக இருப்பு வைக்க வேண்டும். விற்கப்படும் நாற்றுகளுக்கு விற்பனை ரசீது வாங்குபவர்கள் கையொப்பம் பெற்று வழங்கப்பட வேண்டும். இருப்பு மற்றும் விலை பலகை பராமரிக்க வேண்டும். உரிமம் பெற்றால் நர்சரி அமைத்துள்ளவர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story