101 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சி மாநகரில் 101 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு இதுவரை 101 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 ேபர் மீதும், போதை மாத்திரைகள், ஊசிகள் விற்றதாக 11 ேபர் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 ேபர் மீதும், இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 ேபர் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஒருவர் மீதும், கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவர் மீதும் ஆக திருச்சி மாநகரத்தில் 7 மாதங்களில் இதுவரை மொத்தம் 101 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.