152 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
152 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை மாத்திரை விற்பனை, பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 152 பேர் கடந்த 10 மாதங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள், குற்றச்செயலில் ஈடுபட்ட 123 பேரும், போதை பொருட்களை விற்ற 16 பேரும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரும், விபசாரத்தில் ஈடுபட்ட 4 பேரும் அடங்குவர்.
23 ஆண்டுகளுக்கு பிறகு...
கடந்த ஆண்டு 85 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு 10 மாதங்களில் 152 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.