தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரூர்

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட்டதா? என கரூர் பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையன், முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன், 2-ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன், மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சந்திரமதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 29 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 21 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

21 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது, 15-ல் முரண்பாடு கண்டறியப்பட்டது. 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 6 நிறுவனங்களில் முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் பகுதிகளில் மொத்தம் 61 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 42 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story