விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர்,

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ், தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சுதந்திர தினமான நேற்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாளர்கள் பணியாற்ற முன் அனுமதி பெறாத 56 நிறுவனங்கள் (கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்) மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமர்ப்பிக்க வேண்டும்

வருங்காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தெரிவித்தார்.


Next Story