இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை


இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவாரூர்

மே தினத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் ஆகிேயாரின் ஆணையின்படி திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மே தினத்தன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவத்து நிறுவனங்கள் என மொத்தம் 80 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஆய்வின்போது 38 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் தெரிவித்தார்.


Next Story